Breaking News

புகைபிடிக்கும் கூடத்திற்கு தடை தடை - அரசிதழ் வெளியீடு Smoking Room Ban

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் உணவுக்கூடங்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் புகைபிடிக்கும் அறை திறக்க தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

                                                

மேலும், விதிகளை மீறி புகைக்குழல் கூடம் திறந்தால் ஓராண்டு முதல் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும், ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசிதழில்:-

தமிழ்நாடு மாநில சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2023 ஆம்ஆண்டு ஜூன் திங்கள் 21 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-சட்ட எண். 22/2023.

2003ஆம் ஆண்டு சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைத் தயாரிப்புகள் (விளம்பரம் செய்தலைத் தடைசெய்தல் மற்றும் வணிகம் மற்றும் வாணிபம், உற்பத்தி செய்தல், வழங்குதல் மற்றும் விநியோகம் செய்தலை முறைப்படுத்துதல்) சட்டத்தை தமிழ்நாடு மாநிலத்திற்கு பொருந்தும் வகையில் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்தி மூன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

1. (1) இந்தச் சட்டம், 2022 ஆம் ஆண்டு சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைத் குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.தயாரிப்புகள் (விளம்பரம் செய்தலைத் தடைசெய்தல் மற்றும் வணிகம் மற்றும் வாணிபம், உற்பத்தி செய்தல், வழங்குதல் மற்றும் விநியோகம் செய்தலை முறைப்படுத்துதல்) தமிழ்நாடு திருத்தச் சட்டம் என வழங்கப்பெறும்.

(2) இது மாநில அரசு, அறிவிக்கையின் வாயிலாக குறிப்பிடப்படவாகும் அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

2. (இதன்பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 2003ஆம் 3ஆம் பிரிவிற்கான ஆண்டு சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைத் தயாரிப்புகள் (விளம்பரம் செய்தலைத் திருந்தம். தடைசெய்தல் மற்றும் வணிகம் மற்றும் வாணிபம், உற்பத்தி செய்தல், வழங்குதல் மற்றும் விநியோகம் செய்தலை முறைப்படுத்துதல்) சட்டத்தின் 3ஆம் பிரிவில், (e) கூறுக்குப் பின்பு, பின்வரும் கூறானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

(ee) “புகைக்குழல் கூடம்" என்பது, பகிர்ந்துகொள்ளும் புகைக்குழல் அல்லது தனியாக வழங்கப்படக் கூடிய தென்னைப் புகைக்குழவில் இருந்து புகையிலையைப் புகைப்பதற்கு மக்கள் ஒன்று கூடுவதற்கான ஒரு அமைவிடம் என்று பொருள்படும்;".

3. முதன்மைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவிற்கு பின்பு, பின்வரும் பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

“4A புகைக்குழல் கூடத்தினை தடைசெய்தல்.- இந்தச் சட்டத்தில் அடங்கியிருப்பது எவ்வாறிருப்பினும், நபரெவரும், அவருக்குச் சொந்தமாகவோ அல்லது பிற நபர் எவரின் சார்பாகவோ, உணவுக் கூடம் உள்ளடங்கலான எந்த இடத்திலும், புகைக்குழல் கூடம் எதனையும் திறக்கவோ அல்லது நடத்தவோ அல்லது வாடிக்கையாளர்களுக்கு புகைக்குழலினை வழங்கவோ கூடாது.

விளக்கம்.- “உணவுக்கூடம்” என்பது உணவு அல்லது சாராயம், மது, கோதுமைச் சாராயம், பார்லி சாராயம் அல்லது பிற தானியவகையிலான மதுபானங்களை உள்ளடக்காதச் சிற்றுண்டி வகை எதனையும், சாதாரண வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றதும் நுகர்வுக்காக விற்கப்படுகின்றதுமான இடம் எதுவும் என்று பொருள்படும்.”. 

4. முதன்மைச் சட்டத்தின் 12ஆம் பிரிவில் (1)ஆம் உட்பிரிவில்:- (2) கூறில், “அல்லது செய்யப்படுகிற” எனும் சொற்றொடருக்குப் பின்பு “அல்லது” எனும் சொற்றொடரானது சேர்க்கப்படுதல் வேண்டும்;

(ii) அவ்வாறு திருத்தப்பட்டவாறான (t) கூறுக்குப் பின்பு, பின்வரும் கூறானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-

(c) புகைக்குழல் கூடம் எதுவும் நடத்தப்படுகிறவிடத்து.".

13A எனும் புதிய பிரிவினை உட்புருத்துதல்,

5. முதன்மைச் சட்டத்தின் 13ஆம் பிரிவிற்கு பின்பு, பின்வரும் பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

“13A. கைப்பற்றுதலுக்கான அதிகாரம்,- மாநில அரசினால் அதிகாரமளிக்கப்பட்ட, உதவி ஆய்வாளர் படிநிலைக்குக் குறையாத, காவல்துறை அலுவலர் எவரும், 4A ஆம் பிரிவின் அந்த வகைமுறைகளானவை மீறப்படுகிறது அல்லது மீறப்பட்டுள்ளது என நம்புவதற்கான காரணத்தைக் கொண்டிருந்தால், புகைக்குழல் கூடத்தின் உட்பொருளாகவோ அல்லது துணைப் பொருளாகவோ பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள் அல்லது பொருள் எதனையும் அவர் கைப்பற்றலாம்.”

21A எறும் புதிய பிரிவினை உட்புருத்துதல்.

5. முதன்மைச் சட்டத்தின் 21ஆம் பிரிவிற்கு பின்பு, பின்வரும் பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

21A. புகைக்குழல் கூடத்தினை நடத்துவதற்கான தண்டனை.- 4Aஆம் பிரிவின் வகைமுறைகளை மீறுகிறவர் எவரும், ஓர் ஆண்டிற்கு குறையாத ஆனால் மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாகும் ஒரு காலஅளவிற்கு சிறைத் தண்டனையும் இருபதாயிரம் ரூபாய்க்குக் குறையாத. ஆனால் ஐம்பதாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் அபராதமும் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்,"






Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback