உ.பியில் இருந்து ஆன்மீக சுற்றுலா வந்த பயனிகள் ரயில் தீ விபத்து நடந்து என்ன முழு விவரம் madurai railway station rail fire
உத்திரப் பிரதேச மாநிலம் சித்தூரிலிருந்து இராமேஸ்வரத்திற்கு வந்த ஆன்மீக சிறப்பு சுற்றுலா இரயிலில் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்பட்டு மதுரை இரயில் நிலையத்தில் இன்று (26-8-2023) அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அதில் பயணித்த பயணிகள் சமையல் செய்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்
சுற்றுலா ரயில்:-
கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து ஆன்மிகப் பயணமாக 60-க்கும் மேற்பட்டோர் அடங்கிய குழுவினர் பல்வேறு கோயில்களுக்குப் பயணித்த அவர்கள், நேற்று நாகர்கோவில் பத்மநாப சுவாமி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு இரவு கன்னியாகுமரி ரயில் மூலமாக இன்று அதிகாலை 3.45 மணியளவில் மதுரை வந்துள்ளனர்.
இன்று மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்துவிட்டு, நாளை ராமேஸ்வரம் செல்வதாக இருந்தது
புணலூரில் இருந்துவந்த ரயில் மூலம் அவர்கள் மதுரை வந்தனர். அவர்கள் வந்த இரண்டு ரயில் பெட்டிகள் தனியாகப் பிரிக்கப்பட்ட மதுரை ரயில்வே சந்திப்பில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. கனெக்டிங் ரயில் மூலமாக நாளை சென்னை செல்லவிருந்தனர்.
தீ விபத்து:-
தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடிய கூடாது என்ற தடையை மீறி சிலிண்டரை ரயிலில் எடுத்து சென்று சமையல் செய்துள்ளனர். இதனால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 5.15 மணியளவில் தேநீர் தயாரிப்பதற்கு சிலிண்டர் பற்ற வைத்துள்ளனர். அப்போது சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டு ரயிலில் தீப்பிடித்துள்ளது. தீ மளமளவெனப் பரவ ரயில் பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியேறியுள்ளனர். 55 பேர் உயிர் தப்பியுள்ளனர்.
சமையல் செய்வதற்காக ரயில் பெட்டியின் ஒருபுறம் உள்ள கதவில் உள்புறம் தாழிடப்பட்டிருந்த நிலையில் பயணிகள் அனைவரும் ஒரே பக்கத்தில் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தீயில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.
உயிரிழந்தவர்கள் யார்:-
விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 3 பேர் பெண்கள், 6 பேர் ஆண்கள் மற்றும் ஒருவரின் அடையாளம் தெரியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
தீ விபத்து காரணம் என்ன:-
ரயிலில் சட்ட விரோதமாக சிலிண்டர் போன்ற தீ பற்ற கூடிய பொருட்களை எடுத்து சென்றது தான் ரயில்வே அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் மூன்று மண்ணெண்ணெய் அடுப்புகள், இரண்டு சிலிண்டர்கள், விறகுக்கட்டை போன்றவை தீ விபத்துக்குள்ளான ரயிலில் கிடைத்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வு:-
விபத்து நடந்த பகுதியில் தமிழக அமைச்சர் மூர்த்தி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா, காவல் உயரதிகாரிகள், தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் விரைந்து சென்று மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர்
இழப்பீடு:-
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். மேலும், மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்களை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தேவையான உதவிகளை செய்திடுமாறும் கேட்டுக்கொண்டேன் என வெளியிட்டுள்ளார்
உதவி எண்கள்:-
விபத்து குறித்த தகவல்களை பெற 9360552608, 8015681915 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளத
நடவடிக்கை:-
இந்த ஆன்மீக சுற்றலாவை ஏற்பாடு செய்த உத்தரப் பிரதேச மாநிலம் சீதாப்பூரைச் சேர்ந்த பாசின் டிராவல்ஸ் எனும் தனியார் நிறுவனம் மீது தென்னக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் . மேலும் அந்த தனியார் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரை கைது செய்யவும் லக்னோ போலீசாருக்கு தென்னக ரயில்வே உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரயிலில் என்ன பொருட்கள் கொண்டு செல்லக் கூடாது:-
ரயிலில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்வது ரயில்வே சட்டம் 1989 பிரிவு 164 மற்றும் 165ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
ரயிலில் மிகவும் எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருட்களைக் கொண்டு செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.
பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், பட்டாசு, கேஸ் சிலிண்டர், கன் பவுடர் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துக்கொண்டு ரயிலில் பயணம் செய்யக்கூடாது.ரயிலுக்குள் அடுப்பு, கேஸ், ஓவன் போன்றவற்றை பற்றவைக்கக் கூடாது.
அதே நேரத்தில், ரயில் பெட்டியிலோ அல்லது ரயில் நிலையத்திலோ சிகரெட்டைப் பற்ற வைக்கக்கூடாது.ரயிலில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்வது ரயில்வே சட்டம் 1989 பிரிவு 164 மற்றும் 165ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
மீறினால், ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
Tags: தமிழக செய்திகள்
