Breaking News

பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் Kerala govt moves resolution Uniform Civil Code

அட்மின் மீடியா
0

பொது சிவில் சட்டம் அமல்படுத்துவதற்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!


 

பொது சிவில் சட்டம் என்றால் என்ன:- 


இந்தியாவில், வெவ்வேறு சமூகங்களில் அவர்களின் மதம், நம்பிக்கை போன்றவற்றின் அடிப்படையில் திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை மற்றும் தத்தெடுப்பு விஷயங்களில் தனித்தனியான சட்டங்கள் உள்ளன. ஆனால் பொது சிவில் சட்டம் இயற்றப்பட்டால், நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவருக்கும் சாதி, மதம், பாலின பாகுபாடு இல்லாமல் ஒரே மாதிரியான சட்டம் பின்பற்றப்படும்

இந்தியாவில் குற்றவியல் நடவடிக்கைக்கான சட்டத்தைப் பொறுத்தவரை, இந்தியா முழுக்க அனைவருக்கும் ஒன்றுதான். அதாவது கொலை, கொள்ளை போன்ற குற்றவியல் சம்பவங்களில் யார் ஈடுபட்டாலும் ஒரே தண்டனை தான். ஆனால், திருமணம், விவாகரத்து, பரம்பரை, தத்தெடுப்பு போன்ற அவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் அனைத்து மதச் சமூகங்களுக்கும் பொருந்தும் படி அவரவர் மதங்களுக்கு பல்வேறு சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. 

அதாவது, தனிநபர்களுக்கான சிவில் சட்டம் மதங்களுக்கு மதம் மாறுபடும். இப்படி இந்தியாவில் உள்ள, பல்வேறு சிவில் சட்டங்களை நீக்கி, அனைத்து தரப்பினருக்கும் ஒரே சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என பாஜக முனைப்பு காட்டி வருகின்றது.
 
கேரளா தீர்மானம்:-

மத்திய பாஜக அரசின் இந்த பொது சிவில் சட்டத்திற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்த சட்டத்தை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். 
 
இந்த நிலையில், பொது சிவில் சட்டத்திற்கு எதிராக, கேரள சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் பினராயி விஜயன்.
 
கேரள மாநிலத்தில் ஆளும் இடதுசாரிகள் மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான UDF மற்றும் மாநிலத்தில் உள்ள பல்வேறு மத அமைப்புகள் UCC க்கு எதிராக குரல் எழுப்பி வரும் நிலையில் இன்று கேரளாவில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. 
 
மேலும் முதல்வர் பினராயி விஜயன் கொண்டு வந்த பொது சிவில் சட்டம் அமல்படுத்துவதற்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது!

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback