Breaking News

இனி வாட்ஸப்பில் வீடியோ மெசேஜ் அனுப்பலாம் எப்படி அனுப்புவது முழு விவரம் how to send whatsapp video message

அட்மின் மீடியா
0

 இனி வாட்ஸ் அப்பில் வீடியோ மெசேஜ் அனுப்பலாம் முழு விவரம்


வாட்ஸ் அப் நிறுவனம் வீடியோ மெசேஜ் என்கிற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ் அப்பில் டெக்ஸ்ட் மெசேஜ் மற்றும் வாய்ஸ் மெசேஜ் அம்சங்களை போலவே, 60 வினாடிகள் வரையிலான வீடியோக்களை மெசஜாக ஷேர் செய்து கொள்ளலாம். 

டெக்ஸ்ட் மற்றும் வாய்ஸ் மெசேஜ்களை போலவே வீடியோ மெசேஜ் அம்சமும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டவை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

வாட்ஸ் அப்:-

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப்பில் பயனாளர்களை கவரும் விதமாக அடுத்தடுத்து பல்வேறு புதிய அப்டேட்கள் தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்த அப்டேட்கள் வாட்ஸ்-அப் பயனாளர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது என்றே கூறலாம்

புதிய அப்டேட்:-

வாட்ஸப்பில் புதியதாக எடிட் பட்டன், தனிநபர் சாட் லாக், மல்டிடிவைஸ் சப்போர்ட் உள்ளிட்ட பல அப்டேட்டை தொடர்ந்து தற்போது வாட்ஸ்அப் வழியாக 1 நிமிட வீடியோக்களை ஷேர் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது

தற்போது வாட்ஸப்பில் நாம் ஒரு மெசேஜ்ன் ஐ டைப் செய்து அனுப்பலாம் அல்லது ஆடியோ மெசேஜ்களை அனுப்பலாம்

இனி ஆடியோ மெசஜ் போல் வீடியோ மெசேஜ் ஷேர் செய்யும் வசதியை கொடுத்துள்ளது வாட்ஸப் நிறுவனம்

வீடியோ மெசஜ் பயன்படுத்துவது எப்படி:-

முதலில் ப்ளே ஸ்டோர் சென்று உங்கள் வாட்ஸப் அப்டேட் செய்யுங்கள்

அடுத்து வாட்ஸ் அப்பில் வீடியோ செய்தியை அனுப்ப வாட்ஸப் சேட் செல்ல வேண்டும். 

அடுத்து டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பும் பாக்ஸின் வலதுபுறத்தில் உள்ள கேமரா பட்டனை அழுத்தவும்

அடுத்து அதில் கேமரா பட்டனை வீடியோ பட்டனாக மாற்ற ஆப்ஷன் கேட்கும். 

அதனை பயன்படுத்தி குறுகிய வீடியோ செய்திகளை அனுப்பத் தொடங்கலாம். 

இப்போது அனைத்து வாட்ஸ்அப் பயனர்களும் வீடியோ செய்திகளை அனுப்ப முடியும். அதாவது வாட்ஸ்அப் மூலம் வீடியோவை உருவாக்கி அதை உங்கள் தொடர்புகளுக்கு அனுப்பலாம்

Open the chat you want to send the video message to.

Tap the microphone icon in the bottom-right corner of the screen to switch to video mode.

Tap and hold the camera icon to record the video.

Release the camera icon to stop recording and send the video message.

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback