திருவண்ணாமலை அருகே இந்தி தேர்வு எழுத ஹிஜாப் அணிந்து வந்ததால் அனுமதி மறுப்பு hijab tiruvannamalai
அட்மின் மீடியா
0
திருவண்ணாமலை மாவட்டம் கோமாசிபாடி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் இன்று பாரத் இந்தி பிரசார சபாவின் தேர்வு நடந்தது. இந்த தேர்வு எழுத திருவண்ணாமலை கரிகாலன் தெருவை சேர்ந்த அரபு மொழி ஆசிரியர் ஷபானா இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகின்றார்
மேலும் ஷபானா ஹிஜாப் அணிந்து தனது தேர்வு எழுத வந்திருந்தார். அவர் தனது ஹால்டிக்கெட்டை காண்பித்து தேர்வறைக்கு சென்றார். அவருக்கு கேள்வித்தாள் வழங்கப்பட்டது. தேர்வும் தொடங்கிய நிலையில் 10 நிமிடம் கழித்து ஹிஜாப்பை அகற்றும்படி ஷபானாவிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து ஹிஜாப்பை கழற்ற மறுத்ததாக கூறி அவர் தேர்வறையில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியது.
Tags: தமிழக செய்திகள்

