Breaking News

இனி g pay, phonepe, paytm ல் பணம் அனுப்ப டைப் செய்ய வேண்டாம் குரல் கொடுத்தால் போதும் AI தொழில்நுட்பம் அறிமுகம் NPCI அறிவிப்பு

அட்மின் மீடியா
0

பயனர்கள் தங்கள் குரலை பயன்படுத்தி யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் புதிய அம்சத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் துணையுடன் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்ய உள்ளது.



டிஜிட்டல் பேமென்ட் முறைகளில் புதிய தொழில்நுட்பத்தை கொண்டு மேம்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி இதனை அறிமுகம் செய்கிறது. இது 'Conversational பேமென்ட்ஸ்' என அறியப்படுகிறது. 

குரல் வழி பயன்பாடு பயனர்கள் பயன்படுத்த மிக எளிதான வகையில் இருக்கின்ற காரணத்தால் இந்த நகர்வை ஆர்பிஐ முன்னெடுத்துள்ளது. 

முதற்கட்டமாக இந்தி மற்றும் ஆங்கில மொழியில் இது பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக பிராந்திய மொழிகளில் அறிமுகம் செய்யப்படும் எனவும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் உதவியுடன் பயனர்கள் குரல் மூலம் இந்த  பணப்பரிவர்த்தனை அம்சத்தை பயன்படுத்தலாம்.

 செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அனைத்து UPI பேமெண்ட் தளங்களிலும் | பயனர்கள் தங்களது குரல் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்யும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) அறிவிப்பு

Tags: இந்திய செய்திகள் தொழில்நுட்பம்

Give Us Your Feedback