புதிதாக பரவும் எரிஸ் வகை கொரோனா முழு விவரம் ERIS
கடந்த 2019 ஆண்டு இறுதியில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி விட்டது. இதனால் உலகம் முழுவதும் பலர்உயிரிழந்தனர்.
அதன்பின்பு தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டது . அதன் பின்பு கொரனா பாதிப்பு குறைய துவங்கியது. அதன்பின்பு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வந்த நிலையில் தற்போது சில நாடுகளில் மீண்டும் புதிய வகை கொரோனா வேகமெடுத்து பரவத் தொடங்கியுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது பிரிட்டனில் கொரோனாவின் புதிய வகையான எரிஸ் என்ற வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனை ஒமிக்ரான் வைரஸின் துணை பிரிவாக எரிஸ் வைரஸ் உள்ளதாக அறிவியலாளர்கள் அறிவித்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 7ல் ஒருவருக்கு இந்த வகை வைரஸ் தாக்குதல் பிரிட்டனில் ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே பரவிய கொரோனா வகைகளில் தற்போது பரவி வரும் எரிஸ் வைரஸ் அதிக ஆபத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டவை என கூறப்படுகின்றது
கோவிட்19 வைரஸின் புதிய வகை மாறுபாடான ஓமிக்ரானின் துணை மாறுபாடு EG.5 என்று அழைக்கப்படும் எரிஸ் (ERIS) வைரஸ் ஆனது அமெரிக்கா, சீனா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பரவிவருகிறது.
Tags: இந்திய செய்திகள் வெளிநாட்டு செய்திகள்
