Breaking News

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் Driver cum conductor

அட்மின் மீடியா
0

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர் உடன் நடத்துநர் பணியிடங்களுக்கு நாளை மதியம் 1.00 மணி முதல் வரும் செப். 18ம் தேதி மதியம் 1.00 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது



 


தமிழக அரசு பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துநர் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் 812 ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.                                                              

மேற்கொண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், தமிழ், ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும், கனரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் வைத்திருக்க வேண்டும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

தமிழ்நாடு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - விழுப்புரம்,   தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - கும்பகோணம்,   தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - சேலம்,  தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - கோவை,   தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - மதுரை,   தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - திருநெல்வேலி.   ஆகிய இடங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் போக்குவரத்து துறை அமைச்சகத்தால் நியமிக்கப்படுகின்றனர். 

விழுப்புரம் கோட்டம் நீங்கலாக, மற்ற கோட்டங்களில் காலியாக உள்ள 812 ஓட்டுநர் உடன் நடத்துனர்  பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது  அந்த வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் உடன் நடத்துனர் 812 காலி பணியிடங்களை நிரப்புதவற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது  

கல்வித் தகுதி :-  

டிரைவர் பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.  

கண்டக்டர் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  

தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.  

கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான தகுதியான லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். 

கனரக வாகனம் ஓட்டுவதில் 18 மாதங்கள் அனுபவம் கண்டிப்பாக வேண்டும்.   நடத்துனர் லைசென்ஸ் இருக்க வேண்டும்.  

வயதுவரம்பு:-   

ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 24 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

இந்நிலையில் 18.08.2023 முதல் http://www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் உடன் நடத்துநர் பதவிக்கு தகுதியுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. 

இப்பதவிக்கு நாளை மதியம் 01.00 மணி முதல் 18.09.2023 மதியம் 01.00 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

நியமனம் தொடர்பான அனைத்து விபரங்களும் http://www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்திலேயே பதிவிடப்பட்டுள்ளது. 

இப்பதவிக்கான நியமனம் முற்றிலும் வெளிப்படை தன்மை உடையதாக இருக்கும் எனவும், தகுதியின் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்யப்படும் என்றும், தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, ஓட்டுநர் உடன் நடத்துநர் திறன் தேர்வு (Practical) மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க:-

http://www.arasubus.tn.gov.in

https://tnstc.onlinereg.in/

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

18.09.2023

மேலும் விவரங்களுக்கு:-

https://tnstc.onlinereg.in/assets/docs/Advertisement_Tamil.pdf




காலி பணியிட அறிவிப்பு எண் 01/SETC/2023

கீழ்க்கண்ட காலி பணியிடங்களுக்கு அடிப்படை தகுதிகளை பூர்த்தி செய்யும் நபர்களிடமிருந்து நேரடியாக விண்ணப்பங்கள் www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன.

1. போக்குவரத்துக் கழகத்தின் பெயர்

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு வரையறுக்கப்பட்டது, சென்னை 

2. பதவியின் பெயர்

ஓட்டுநர் உடன் நடத்துநர்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு வரையறுக்கப்பட்டது, சென்னை.

3. பணிக் காலியிட எண்ணிக்கை

685.

4. இன சுழற்சி (பின்னடைவு காலியிடங்கள் உட்பட) (Backlog)

அரசு விதிமுறைகளின்படி நடைமுறைப்படுத்தப்படும்.

5. குறைந்தபட்ச வயது

01.01.2023 அன்று 24  வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

6. வயது 

01.01.2023 அன்று பொது வகுப்பினர் (OC) 40 வயது பூர்த்தியாகாமலும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் (BC/MBC/DNC/SC/ST) 45 வயது பூர்த்தியாகாமலும் இருத்தல் வேண்டும்.

முன்னாள் இராணுவத்தினருக்கு 01.01.2023 அன்று பொது வகுப்பினர் (OC) 50 வயது பூர்த்தியாகாமலும் மற்றும் இதர வகுப்பினர் (BC/MBC/DNC/SC/ST)

55 வயது பூர்த்தியாகாமலும் இருத்தல் வேண்டும்.

7. கல்வித் தகுதி:-

பத்தாம் வகுப்பு (SSLC) தேர்ச்சி மற்றும் தமிழில் பேசவும், படிக்கவும், எழுதவும் தெரிந்திருத்தல் அவசியம்.

8. முக்கிய தகுதிகள்

செல்லத்தக்க கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் குறைந்தபட்சம் 18 மாதங்கள் கனரக வாகனம் ஓட்டிய அனுபவம், முதலுதவிச் சான்று, பொதுப் பணி வில்லை மற்றும் செல்லத்தக்க நடத்துநர் உரிமம் 01.01.2023-க்கு முன்னர் பெற்றதாக

10.உடல் தகுதி (1)

எவ்விதமான உடல் அங்க குறைபாடு (Physical deformity) அற்றவராக இருத்தல் வேண்டும். கண் பார்வைத் திறன் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள் இருக்க வேண்டும். கீழே கண்ட குறைபாடுகள் அற்றவர்களாக இருத்தல் வேண்டும்.

1. கண் பார்வைத்திறன் குறைபாடு.

2. காது கேட்கும் திறன் குறைபாடு.

11.உடல் தகுதி (2)

3. இரவுக் குருடு மற்றும் நிறக்குருடு குறைபாடு.

4. வளைந்த கால்கள், முழங்கால்கள் ஒட்டுதல் மற்றும் சமமான பாதங்கள் ஆகிய குறைபாடுகள்.

சாலை போக்குவரத்து நிறுவனம் மூலம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச வயது 24 மற்றும் 18 மாதங்கள் முன் அனுபவம் ஆகிய நிபந்தனைகள் பொருந்தாது.

மேலே கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து வங்கி சேவை கட்டணம் நீங்கலாக SC/ST பிரிவினர் ரூ.590/- (18% GST உட்பட) கட்டணமாகவும், வங்கி சேவை கட்டணம் நீங்கலாக இதர பிரிவினர் ரூ.1180/- (18% GST உட்பட) கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் முறையே எழுத்து தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம் எந்த காரணத்தை முன்னிட்டும் திரும்ப வழங்கப்படமாட்டாது.

விண்ணப்பதாரர்கள் எழுத்து/செய்முறை/நேர்முகத் தேர்விற்கு வருவதற்கான பயணச்செலவு மற்றும் இதர செலவு தொகை ஏதும் வழங்கப்படமாட்டாது.

இந்நியமனம் தொடர்பாக நடத்தப்படும் எழுத்து/செய்முறை/நேர்முகத் தேர்வு தொடர்பான அனைத்து விபரங்களையும் அறிய www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

இணையதளம் மூலம் விண்ணப்ப படிவம் 18.08.2023 மதியம் 01.00 மணி முதல் 18.09.2023 மதியம் 01.00 மணி வரை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். அதன் பிறகு இணைப்பு முடக்கப்படும்.

இதர விபரங்கள் போக்குவரத்துக் கழக பொதுப்பணி விதிகள் மற்றும் அரசு விதிகளுக்கு உட்பட்டது. தகுதி பெறாதவர்களின் விண்ணப்பங்களை எவ்வித அறிவிப்புமின்றி நிராகரிக்க போக்குவரத்துக் கழகத்திற்கு அதிகாரம் உண்டு. 

சென்னை உயர்நீதிமன்றம் W.P.No.20290 of 2012, நாள்.27.08.2014 மற்றும் W.A.No.1737 of 2014, நாள்.20.06.2019 வழக்கில் பிறப்பித்த உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின் படி இவ்வறிக்கை வெளியிடப்படுகிறது.

தேர்வு அனுமதிச் சீட்டு பதிவிறக்கம் மற்றும் தேர்வு நடைபெறும் இடங்கள் பற்றிய விபரங்கள் www.arasubus.tn.gov.in என்ற

இணைய தளத்தில் அவ்வப்போது பதிவிடப்படும். விண்ணப்பதாரர்கள் இத்தளத்தோடு தொடர்பில் இருக்கவும்.

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback