Breaking News

தொடர் விடுமுறை காரணமாக சிறப்பு பேருந்துகளை தொடர்ந்து சிறப்பு ரயில்கள் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் இந்த ஆண்டு சுதந்திர தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் 2வது சனிக்கிழமை, ஞாயிறும் விடுமுறை என்பதால் பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 1100 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. 



அதாவது, சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்வதற்காக 500 சிறப்பு பேருந்துகளும், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து பிற ஊர்களுக்கு செல்வதற்காக 400 சிறப்பு பேருந்துகளும், ஆகஸ்ட் 12ஆம் தேதி 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கத் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்திருக்கிறது. 

ஆகஸ்ட் .12, 13 மற்றும் சுதந்திர தினமாக ஆக.15-ல் விடுமுறை என்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.அதன்படி, சென்னையில் இருந்து ஆக.11ம் தேதி கூடுதலாக 500 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 

கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் ஆகிய முக்கிய இடங்களுக்கு ஆக12ல் 200 சிறப்பு பேருந்துகளும், 

தொடர் விடுமுறை என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், சொந்த ஊர்களுக்கு செல்வோர்களுக்கு எதுவாகவும் சிறப்பு பேருந்துகள் இடக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், ஆக.11-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை தாம்பரம் – நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

அதன்படி வரும் 11ம் தேதி தாம்பரத்தில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.15க்கு ரயில் (06051) நெல்லையை சென்றடையும். 

இதேபோல் நெல்லையில் 12-ஆம் தேதி மாலை 5.50க்கு ரயில் புறப்பட்டு மறுநாள் காலை 4.10க்கு தாம்பரம் சென்றடையும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback