பிரக்யான் ரோவர் எதிரில் இருந்த பள்ளம் சாதுர்யமாக புதிய பாதையில் பயணம்.. இஸ்ரோ வெளியிட்ட புகைப்படம்
பிரக்யான் ரோவர் எதிரில் இருந்த பள்ளம் சாதுர்யமாக புதிய பாதையில் பயணம்.. இஸ்ரோ வெளியிட்ட புகைப்படம்
சந்திரயான்-3 விண்கலத்தின் 'விக்ரம்' லேண்டா், நிலவின் தென்துருவத்தில் கடந்த 23-ஆம் தேதி வெற்றிகரமாகத் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கியது. அதில் இருந்து வெளியே வந்த 'பிரக்யான்' ரோவா், நிலவின் மேற்பகுதியில் ஊர்ந்து சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் நிலவில் நடக்கும் ஆய்வு பணிகளின் முக்கிய நிகழ்வுகளை இஸ்ரோ தனது சமூக வலைதளத்தில் அவ்வப்போது அப்டேட் செய்து வருகின்றது
அதன் படி கடந்த வாரம் , விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கிய வீடியோ, பிரக்யான் ரோவர் வெளி வந்த வீடியோ மற்றும் பிரக்யான் ரோவர் நகர்ந்து செல்லும் வீடியோ என பல்வேறு அப்டேட்களை கொடுத்து வந்தது
இந்நிலையில் பிரக்யான் ரோவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொண்டபோது, அதன் எதிரில் சுமார் 4 மீட்டா் விட்டம் கொண்ட பள்ளம் குறுக்கிட்டது. ரோவரின் இடத்தில் இருந்து 3 மீட்டா் தொலைவில் இருந்த அந்தப் பள்ளம் முன்கூட்டியே சரியாகக் கண்டறியப்பட்டதால், பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
அதையடுத்து பிரக்யான் ரோவரின் பாதையை இஸ்ரோ விஞ்ஞானிகள் பெங்களூரில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து மாற்றியமைத்தனா்.
மேலும் மேடான பகுதியை கடக்கக் கூடிய வகையில் ரோவரில் தொழில் நுட்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
புதிய பாதையில் ரோவா் தற்போது வெற்றிகரமாகப் பயணம் மேற்கொண்டு வருவதாக டிவிட்டர் சமூக வலைதளத்தில் இஸ்ரோ பதிவிட்டுள்ளது.
ரோவரின் பாதையில் குறுக்கிட்ட பள்ளம், மாற்றியமைக்கப்பட்ட புதிய பாதை ஆகியவற்றின் படங்களை சமூக வலைதளத்தில் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்

