Breaking News

தமிழ்நாடு வக்ஃப் வாரிய முத்தவல்லிகளுக்கான தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கான அறிவிப்பு

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு வக்ஃப் வாரிய முத்தவல்லிகளுக்கான தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கான அறிவிப்பு



தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலில் வாக்களிப்போருக்கான முத்தவல்லிகள் பிரிவிற்கு இறுதி வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, 14.08.2023 அன்று வெளியிடப்படுகிறது. 

இவ்வாக்காளர் பட்டியல், தேர்தல் அதிகாரி/ஆணையர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் அலுவலகம், சேப்பாக்கம், சென்னை-600 005, 

முதன்மைச் செயல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வக்ஃப் வாரியம், எண்.1, ஜாபர்சிராங் தெரு, மண்டல வள்ளல் சீதக்காதி நகர், சென்னை-600 001, 

அனைத்து வக்ஃப் கண்காணிப்பாளர்களின் அலுவலகங்கள் (11 மண்டலங்கள்) மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9-ன் அதிகாரபூர்வ வலைதளம் ஆகியவற்றில் வெளியிடப்படுகிறது.

2. தேர்தல் நடத்துவதற்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும். தேர்தல் பற்றிய அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் தேர்தல் அதிகாரியால் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback