மாணவ மாணவிகளே கல்வி சான்றிதழ்களை லேமினேசன் செய்யக்கூடாது என அறிவுறுத்தல்
மதிப்பெண் சான்றிதழ்களை "லேமினேசன்" செய்யக் கூடாது என்று கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், இந்த ஒரிஜினல் மார்க் சீட் சான்றிதழ்களில் எதாவது கறை படியாமல் இருக்கவும், கிழிந்துவிடாமல் இருக்கவும்பாதுகாப்பு காரணங்களுகாக பலரும் அதனை லேமினேஷன் செய்கின்றனர். இதுபோன்ற செயலை இனிமேல் செய்ய கூடாது என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது
லேமினேஷன் ஏன் கூடாது:-
லேமினேசன் செய்யும்பொழுது சிலநேரங்களில் இயந்திர கோளாறு காரணமாக சான்றிதழ்கள் பழுதடைய நேரிடலாம்
மதிப்பெண் சான்றிதழில் பிறந்த தேதி, பெயர் மாற்றம் திருத்தம் செய்ய நேரிடும் போது லேமினேசன் செய்திருந்தால் திருத்தம் செய்வது கடினமாக இருக்கும்
வெளிநாடு செல்லும் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களின் பின்புறம் அரசு முத்திரை வைக்கும்போது லேமினேசனில் இருந்து சான்றிதழை பிரிக்கும் போது சான்றிதழ் சிதைய நேரிடலாம்
அதேபோல் அரசு பணி அல்லது உயர் கல்விகளில் சேரும் போது சான்றிதழ்
சரிபார்ப்புக்கு பின் அரசு முத்திரை பதிக்கப்படும் என்பதால் மதிப்பெண்
சான்றிதழை லேமினேஷன் செய்யக்கூடாது
எனவே, மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் லேமினேசன் செய்ய வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்