கொடைக்கானல் சுற்றுலாத்தலங்கள் தற்காலிகமாக மூடல்! எந்த எந்த இடங்கள் முழு விவரம்
பராமரிப்பு பணிகளுக்காக கொடைக்கானலின் சுற்றுலாத்தலங்கள் தற்காலிகமாக மூடல்!
கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான மேயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், தூண் பாறை, குணா குகை உள்ளிட்டவை பராமரிப்பு பணிகள் காரணமாக மறு உத்தரவு வரும் மூடப்படுவதாக வனத்துறை தகவல். சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பராமரிப்பு பணி காரணமாக மறு உத்தரவு வரும் வரை முக்கிய சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், தூண் பாறை, குணா குகை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் சுற்றுலா தளங்களில் வாகன நிறுத்தும் இடம், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தரவும் சாலைகள் சீரமைப்பு பணி காரணமாக முக்கிய சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், தூண் பாறை, குணா குகை உள்ளிட்ட உள்ளிட்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக மூடப்படுவதாகவும், இந்த இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை எனவும் வனத்துறை தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்