நீட் விலக்கு மசோதாவுக்கு நான் கையெழுத்திட மாட்டேன்.! ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டம்.!
நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து ஒருபோதும் கையெழுத்திடமாட்டேன் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்
தலைநகர் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில் இன்று கடந்த நீட் தேர்வில் 720க்கு 600 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவ, மாணவியர்களோடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அப்போது சேலத்தைச் சேர்ந்த மாணவரின் தந்தை ஒருவர், "தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுகின்றனர். நிறைய மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இருப்பினும், தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். எனவே, தமிழக அரசின் நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு எப்போது விலக்கு அளிப்பீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த ஆளுநர்:-
நீட் தேர்வுக்கு தடை கோருவதை ஒருபோதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திடமாட்டேன். இந்த விவகாரம் பொதுப் பட்டியலில் இருப்பதால், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வைப் பொறுத்தவரை, பயிற்சி மையங்களுக்குச் சென்றுதான், அதில் வெற்றிபெற வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.
பள்ளியில் படிக்கும்போதே, ஆழமாக கவனித்துப் படித்தால் நீட் தேர்வில் வெற்றி பெறலாம். என தெரிவித்தார்.
Tags: தமிழக செய்திகள்
