நிலவில் தரை இறங்கியது எப்படி விக்ரம் லேண்டர் எடுத்த வீடியோவை வெளியிட்ட இஸ்ரோ!
நிலவில் தரை இறங்கியது எப்படி விக்ரம் லேண்டர் எடுத்த வீடியோவை வெளியிட்ட இஸ்ரோ!
கடந்த ஜூலை 14-ம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 விண்கலம், பல்வேறு கட்டங்களாக நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாக ஆகஸ்ட் 23 அன்று தரையிறங்கியதன் மூலம் வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய உலகின் முதல் நாடு என்ற பெருமையையும், நிலவில் கால் பதித்த நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-3 லேண்டர் மாட்யூல் நிலவின் மேற்பரப்பைத் தொட்ட பிறகு எடுத்த முதல் படத்தைப் பகிர்ந்துள்ளது. அந்த படத்தில் சந்திரயான்-3 தரையிறங்கிய தளத்தில் ஒரு காலுடன் மற்றும் அதன் நிழல் படத்தில் தெரிவதை காட்டுகிறது . “சந்திரயான்-3 நிலவின் மேற்பரப்பில் ஒப்பீட்டளவில் தட்டையான பகுதியைத் தேர்ந்தெடுத்தது” என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது நிலவில் தரை இறங்கிய விக்ரம் லேண்டர் எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளது இஸ்ரோ!
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள்