மீண்டும் எம்.பி பதவி நாடாளுமன்றம் சென்றார் ராகுல் காந்தி
அட்மின் மீடியா
0
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றத்தால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் கடந்த தீர்ப்பளித்தது
இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பால், ராகுல் காந்தியிடம் இருந்து பறிக்கப்பட்ட வயநாடு எம்பி பதவி மீண்டும் வந்தது.
இன்று ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் எம்பி பதவியை வழங்கியது மக்களவை செயலகம். எம்பி பதவி மீண்டும் கிடைத்த நிலையில், மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்க ராகுல் காந்தி இன்றே நாடாளுமன்றம் வந்தார். நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்த ராகுல் காந்தியை காங்கிரஸ் உறுப்பினர்கள், எம்பிக்கள் வரவேற்றனர்.
அதுமட்டுமில்லாமல், தனது ட்விட்டர் பக்கத்தில் உள்ள முகப்பில் சுயவிவர குறிப்பில் (பயோவில்) மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் எனவும் குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி.