Breaking News

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வானிலை ஆய்வு மையம் தகவல்

அட்மின் மீடியா
0

வடக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 


தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக, மேற்கு வங்கம், ஜார்கண்ட், பீகார், உத்தரப் பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் விதர்பா உள்ளிட்ட மத்தியப் பிரதேசத்தின் பல பகுதிகளில் இன்று முதல் ஆகஸ்ட் 21 வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17.08.2023 மற்றும் 18.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

19.08.2023 மற்றும் 20.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

21.08.2023 மற்றும் 22.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

23.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback