திருச்சி அருகே வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு சீர்வரிசை செய்த இஸ்லாமியர்கள் வீடியோ
திருச்சி அருகே வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு சீர்வரிசை செய்த இஸ்லாமியர்கள்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வளநாட்டில் வெங்கடேசபெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோவிலில் நேற்று காலை கும்பாபிஷேகம் முடிந்து மாலை வெங்கடேசபெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.இந்நிலையில் வளநாடு முஹைதீன் ஆண்டவர் ஜும்ஆ பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகத்தின் சார்பில் இஸ்லாமியர்கள் திருக்கல்யாண நிகழ்வுக்கு சீர்வரிசை கொடுக்கும் விதமாக கோயிலுக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளிவாசலில் இருந்து திரளான இஸ்லாமியர்கள் ஊர்வலமாக வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு எடுத்துச் சென்றனர்.
சீர்வரிசை பொருட்களுடன் கோயிலுக்குள் வந்த இஸ்லாமியர்களை கோயில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அன்புடன் வரவேற்றனர். பின்னர் சீர்வரிசைப்பொருட்களை வழங்கிய போது அதை பெற்றுக் கொண்டு இஸ்லாமியர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் மரியாதை கொடுக்கப்பட்டது.
வீடியோ பார்க்க:- வீடியோ நன்றி கலாட்டா
https://twitter.com/galattadotcom/status/1693576369920520427
Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி
