Breaking News

கொடைக்கானலில் சுற்றுலா தளங்களுக்கு இன்று முதல் அனுமதி முழு விவரம்

அட்மின் மீடியா
0

பராமரிப்பு பணிகளுக்காக கொடைக்கானலின் சுற்றுலாத்தலங்கள் தற்காலிகமாக மூடல்!

 


கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான மேயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், தூண் பாறை, குணா குகை உள்ளிட்டவை பராமரிப்பு பணிகள் காரணமாக மறு உத்தரவு வரும் மூடப்படுவதாக வனத்துறை தகவல். சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பராமரிப்பு பணி காரணமாக மறு உத்தரவு வரும் வரை முக்கிய சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், தூண் பாறை, குணா குகை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் சுற்றுலா தளங்களில் வாகன நிறுத்தும் இடம், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தரவும்  சாலைகள் சீரமைப்பு பணி காரணமாக முக்கிய சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், தூண் பாறை, குணா குகை உள்ளிட்ட உள்ளிட்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக மூடப்படுவதாகவும், இந்த இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை எனவும் வனத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அந்த தடை தற்போது விலக்கி கொள்ளப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளிக்கப்ப்ட்டுள்ளது. அதன்படி, கொடைக்கானலில் மூடப்பட்டிருந்த சுற்றுலா தளங்கள் இன்று 18-8-2023 முதல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது

மேலும் வனப்பகுதிக்குள் நுழையும் வாகனங்கள் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி புக், காப்பீட்டு சான்று, மாசு கட்டுப்பாட்டு சான்று வைத்திருக்க வேண்டும் என வனத்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback