Breaking News

பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்கவில்லை எனக்கூறி இளைஞரின் கன்னத்தில் அறைந்த டிக்கெட் பரிசோதகர்கள் வீடியோ

அட்மின் மீடியா
0

  • சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்கவில்லை எனக்கூறி இளைஞரின் கன்னத்தில் அறைந்த டிக்கெட் பரிசோதகர்கள் 
  • அக்‌ஷயா, ஹரிஜான் ஆகிய 2 டிக்கெட் பரிசோதகர்கள் பணியிடை நீக்கம் செய்து ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை


சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்காத பயணி ஒருவரை டிக்கெட் பரிசோதகர் கை நீட்டி அடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை பெரம்பூர் ரயில் நிலையம்:-

பெரம்பூர் ரயில் நிலையத்தில் நேற்று துணை தலைமை டிக்கெட் பரிசோதகர் அக்‍ஷயா பணியில் இருந்தார்.அவர், டிக்கெட் பரிசோதனை நடத்திக் கொண்டிருந்த நேரம், வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். அவரிடம் பிளாட்பார்ம் டிக்கெட் உள்ளதா என அக்‌ஷயா கேட்டுள்ளார். ஆனால் அந்த நபரிடம் பிளாட்பார்ம் டிக்கெட் இல்லாமல் இருந்துள்ளது. 

இதனையடுத்து நிலைய அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளார். அந்த நபர் தான் ரயில் நிலைய நடைமேடைக்கு வரவில்லை என்றும், அதன் எல்லையில் தான் நின்று கொண்டிருந்ததாகவும், அபராதம் செலுத்த தன்னிடம் பணம் இல்லை என்றும் இந்தியில் கூறினார்.அப்போது உடனே  அக்‌ஷயாஅவரின் கன்னத்தில் அறைந்துள்ளார். 

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்நிலைலியில் டிக்கெட் பரிசோகதர்கள் அக்‌ஷயா, ஹரிஜான் இருவரையும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வைரல் வீடியோ பார்க்க:-

https://twitter.com/Silambuselviraj/status/1691729782063403385

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback