Breaking News

ஹிமாச்சலப் பிரதேசம் நிலச்சரிவில் சிக்கி சரிந்த வீடுகள் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

ஹிமாச்சலப் பிரதேசம் கிருஷ்ணா நகர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சீட்டுக்கட்டு போல் சரிந்த வீடுகள்!

மேகவெடிப்பு காரணமாக இமாச்சல் பிரதேஷம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பெய்த கனமழை காரணமாக இமாச்சல் பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இமாச்சல் பிரதேசம் சிம்லாவில் ஏற்பட்ட இரண்டு நிலசரிவுகளில் இதுவரை 14 உடல்கள் மீட்கப்பட்டதாகவும் பலர் இடுபாடுகளில் சிக்கி இருப்பதாகவும் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

உத்தரகாண்ட் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக கங்கை. யமுனை போன்ற ஆறுகள் நிரம்பி வருகின்றன. நீர்நிலைகள் மீண்டும் நிரம்பி வெள்ள அபாயம் ஏற்படும் நிலையில் உள்ளதால் டெல்லி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.

ஹிமாச்சலப் பிரதேசம் கிருஷ்ணா நகர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சீட்டுக்கட்டு போல் சரிந்த வீடுகள் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது

வீடியோ பார்க்க:-

https://twitter.com/nsharmajagran/status/1691101662793076737

https://twitter.com/___Aditi___/status/1691468780818567169

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback