ஓலா, ஊபர், ஸ்விகி, சொமேட்டோ பணியாளர்களுக்கு தனியே நல வாரியம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஓலா, ஊபர், ஸ்விகி, சொமேட்டோ பணியாளர்களுக்கு தனியே நல வாரியம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஓலா, உபேர், ஸ்விகி பணியாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தேசிய கொடியை ஏற்றினார். இதன் பிறகு காவல்துறை அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் ஓலா, ஊபர், ஸ்விகி, ஸொமட்டோ போன்ற நிறுவனங்களைச் சார்ந்த வாகனங்கள் விரைவாக சேவை வழங்கும் நோக்கத்துடன் பயணிப்பதைக் காணலாம். நேரத்தின் அருமை கருதி பணிபுரியும் இத்தகைய பணியாளர்களின் வாழ்க்கை முக்கியமானது. அவர்களின் ஒட்டுமொத்த நலனைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கென தனியே நல வாரியம் ஒன்று அமைக்கப்படும் என்பதையும் இன்று அறிவிக்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்
