அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கைது?
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கைது
அசோக் குமாரை கொச்சியில் வைத்து கைது செய்தது அமலாக்கத்துறை
சென்னையிலிருந்து சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்
4 முறை அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் நடவடிக்கை
இன்று மாலை சென்னைக்கு அழைத்து வந்து நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தகவல்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை அமலாக்க துறை கைது செய்துள்ளனர்.அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூன் மாதம் சோதனை செய்யப்பட்ட நிலையில், அவர் அதன் பிறகு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இதற்கிடையே இது குறித்து விசாரணைக்காக அசோக் குமாரை நேரில் ஆஜராகும்படி அமலாக்கத் துறை பல முறை சம்மன் அனுப்பியது. இருப்பினும், அவர் ஆஜராகாமலேயே இருந்தார். இந்தச் சூழலில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளனர்.
கேரளா மாநிலம் கொச்சியில் இருந்த அசோக் குமாரை அமலாக்கத் துறை கைது செய்தனர். அசோக் குமாருக்கு பல முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் இருந்த நிலையில் அமலாக்கதுறை கைது செய்துள்ளனர்.
கடந்த வாரம் கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கரூர்-சேலம் தேசிய நெஞ்சாலையில் அமைந்துள்ள ராம்நகரில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட வீட்டிற்காக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலை உயர்ந்த கிரானைட் மற்றும் மார்பில் கற்களை கொண்டு இந்த வீட்டை கட்டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் சோதனை நடத்தி இருந்தனர்.
அதன் பின்பு கரூர்-சேலம் புறவழிச்சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய பங்களா குறித்த ஆவணங்களுடன் அசோக் குமாரின் மனைவி நிர்மலா நேரில் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த வீட்டை முடக்குவதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
Tags: அரசியல் செய்திகள்
