Breaking News

நைனிடாலில் பயணிகளுடன் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து வீடியோ இணைப்பு

அட்மின் மீடியா
0

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில் சனிக்கிழமை பெய்த கனமழைக்கு மத்தியில் பயணிகளுடன் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் 3 பேர் பலியாகி உள்ளார்கள்



உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அடுத்த நான்கைந்து நாட்களுக்கு உத்தரகாண்ட், வடக்கு உத்தரபிரதேசம், துணை இமயமலை மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம் உள்ளிட்ட இமயமலை அடிவாரங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்  என தெரிவித்துள்ளது

இந்நிலையில்  சனிக்கிழமை அன்று உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் பலர் காயமுற்றனர், உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டனர், விபத்து நடந்த போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகிவருகின்றது

வீடியோ பார்க்க:-

https://twitter.com/ChaudharyParvez/status/1688068828004003840

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback