ஆகஸ்ட் 9 ம் தேதி 3 மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு முழு விவரம் tomorrow holiday in tamilnadu
ஆடி கிருத்திகையை முன்னிட்டு நாளை ஆகஸ்ட் 9 ம் தேதி 3 மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு முழு விவரம்
ராணிப்பேட்டை மாவட்டம்:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள இரத்தினகிரி, திருத்தணி முருகன் கோயில்களுக்கு அதிகளவில் மக்கள் செல்வார்கள் என்பதால், மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் அறிவிப்பு
இதற்கு ஈடாக வரும் 12ம் தேதி சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆடி கிருத்திகை நாளையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு நாளை ஆக.9 உள்ளூர் விடுமுறைஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 12ம் தேதி பள்ளி, கல்லூரிகள் செயல்படும்"- மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவு
சேலம் மாவட்டம்:-
சேலம் மாநகரில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும்
இந்த ஆண்டு வருகிற ஆகஸ்ட் 9ஆம் தேதி ஆடித் திருவிழா நடைபெற உள்ளது. கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவையொட்டி வருகிற 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடு செய்ய வருகிற செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி வேலை நாளாக கடைபிடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 9ம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம்,:-
திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவிலின் ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு, வரும் 9ம் தேதி புதன்கிழமை அன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
திருத்தணி மலையில் உள்ள சுப்பிரமணிய சாமி கோயிலின் ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு, வரும் 9-ம் தேதி புதன்கிழமை திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உதவிட்டுள்ளார்.இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு 26ம் தேதி வேலை நாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:-
ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு செங்கம் பகுதியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு; இதனை ஈடு செய்யும் விதமாக 12.08.2023 (சனிக்கிழமை) பள்ளி வேலை நாளாக செயல்படும் - மாவட்ட கல்வி அலுவலர்
Tags: தமிழக செய்திகள்
