Breaking News

8 ம் வகுப்பு பாஸ் போதும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையரகத்தில் அலுவலக உதவியாளர் வேலை

அட்மின் மீடியா
0

சென்னையிலுள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் ஆணையாக அலுவலகத்தின் வேலைவாய்ப்பு பிரிவில் காலியாக உள்ள 6 (ஆறு) அலுவலக உதவியாளர் மற்றும் 2 (இரண்டு) காவலர் பணியிடங்களுக்கு சென்னை மாவட்டத்தைச் சார்ந்த மனுதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

சென்னை கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையரகத்தில், காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் காவலர் பணிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

பணி:-

அலுவலக உதவியாளர் பணிக்கு 6 காலியிடம்

காவலர் பணிக்கு 2 காலியிடம்

வயது வரம்பு:-

குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆகும். 

உச்ச வயது வரம்பு 01.07.2023 அன்று 

பொதுப்பிரிவினர் - 32 வயது மிகாமலும், 

பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம் பிரிவினர் 34 வயது மிகாமலும், ஆதிதிராவிட வகுப்பினர் / பழங்குடியினர் – 37 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும் 

முன்னுரிமையுள்ளோர் பணியிடங்களுக்கு அரசாணை (நிலை) எண்.122, மனிதவள மேலாண்மைத் (கே2 துறை, நாள்.02.11.2021ல் தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகள் பின்பற்றப்படும். 

கல்வி தகுதி:-

அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், 

காவலர் பணியிடத்திற்கு தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும்.

உடல் தகுதி:-

உரிய உடற்தகுதி சான்று அரசு மருத்துவமனையின் உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் அவர்களிடமிருந்து பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்க:-

தகுதியுடைய மனுதாரர்கள் உரிய விண்ணப்பத்தை 09.08.2023 முதல் 29.08.2023 வரையிலான அரசு பணி நாட்களில் காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கீழ்க்கண்ட முகவரியிலிருந்து பெற்று அதனை முறையாக நிரப்பி, பதிவு அஞ்சல் வழியாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

தபால் முகவரி:-

துணை இயக்குநர் (நிர்வாகம்),

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையரகம் (வேலைவாய்ப்பு பிரிவு),

எண்,42, ஆலந்தூர் ரோடு, 

திரு.வி.க தொழிற்பேட்டை,

கிண்டி, 

சென்னை600 032

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

30.08.2023 

மேலும் விவரங்களுக்கு:-




Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback