Breaking News

எச்சரிக்கை செய்தி :- போன் சார்ஜர் ஒயரை வாயில் வைத்த 8 மாத குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

அட்மின் மீடியா
0

கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் போன் சார்ஜரில் இருந்து மின்சாரம் தாக்கியதில் 8 மாதக் குழந்தை உயிரிழப்பு குழந்தை விளையாடும்போது தெரியாமல் சார்ஜர் பின்-ஐ வாயில் வைத்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது



கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள கார்வார் தாலுகாவில் உள்ள சித்தராடா கிராமத்தில் வசித்து வரும் சந்தோஷ் கல்குட்கர் – சஞ்சனா கல்குட்கர் தம்பதியினர் மகள் சானித்யா.நேற்று அவர்களது வீட்டில் மொபைல் சார்ஜர் சுவிட்ச் அணைக்காமல் கேபிள் தொங்கியுள்ளது

குழந்தை சானித்யா சார்ஜர் ஒயரை தெரியாமல் வாயில் வைத்துள்ளது அப்போது ஒஅயில் இருந்து மின்சாரம் தாக்கியது.  குழந்தை அலறல் சத்தம் கேட்ட தாயார் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback