இன்று 76 வது சுதந்திர தினமா? அல்லது 77வது சுதந்திர தினமா? ஒரே கன்பியூசனா இருக்க விடை இதோ
இந்தியா சுதந்திரம் பெற்றது 15.08.1947 ஆகும், அதன்பின்பு இந்தியா சுதந்திரமடைந்த முதல் ஆண்டு கொண்டாட்டம் 1948ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிதான் நடந்தது
இந்நிலையில் இந்த ஆண்டு 76வது சுதந்திர தினமா அல்லது 77வது சுதந்திர தினமா என்பதில் பலருக்கும் குழப்பங்கள் உள்ளது.இனையத்தில் இது குறித்து விவாதம் நடந்து வரும் நிலையில் நாம் இந்த ஆண்டு நாம் கொண்டாப்படும் சுதந்திர தினம் எத்தனையாவது என்ன என்று தெரிந்து கொள்வோம் . பொதுவாக சுதந்திர தின கொண்டாட்டம் இரண்டு வகைகளில் கணக்கிடப்படுகின்றன.
முதல்வகை:-
1947 முதல் 2023 வரை என நேரடியாக கணக்கில் கொண்டால் 77வது சுதந்திர தின கொண்டாட்டம் என வந்துவிடுகிறது.
இரண்டாவது வகை:-
ஆனால் ஒருசிலரோ இந்தியா சுதந்திரமடைந்த முதல் ஆண்டு கொண்டாட்டம் 1948ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிதான் நடந்தது அதாவது ஒரு வருடம் கழிந்த பிறகுதான் முதல் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது அப்படி கணக்கிட்டு பார்த்தால் 1948 முதல் 2023 என எடுத்துக்கொண்டால் இது 76வது சுதந்திர தினம் ஆகும் என கூறுகின்றார்கள்
புரிந்து கொள்வது எப்படி:-
நாம் பிறந்தநாளை கணக்கிடுவதைப் போலவே சுதந்திர தினத்தையும் கணக்கிட வேண்டும். அப்படி கணக்கிட்டால் இந்த ஆண்டு 77 ம் ஆண்டு சுதந்திர தினம் ஆகும்.
மத்திய தகவல் தொடர்புத்துறை அளித்த தகவலின் படி, ’ஆகஸ்ட் 15, 2022, 76-வது சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டது.
இதன் அடிப்படையில், நமது அரசு சுதந்திரம் கிடைத்த தினத்தை முதல் ஆண்டாக கருதுகிறது என்றும், அரசு பின்பற்றும் முறைப்படி, இந்த ஆண்டு இந்தியாவின் 77வது சுதந்திர தினமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
Tags: FACT CHECK
