நைஜீரியாவில் சோகம் ஜும்மா தொழுகையின் போது மசூதி இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழப்பு.. 23 பேர் காயம் nigeria mosque collapses
நைஜீரியாவில் சோகம் ஜும்மா தொழுகையின் போது மசூதி இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழப்பு.. 23 பேர் காயம்!
நைஜீரியா நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள கடுனா மாவட்டத்தின் ஜரியா பகுதியில் உள்ள ஜரியா சென்ட்ரல் மசூதியில், நேற்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக மசூதியின் ஒரு பக்க தளம் இடிந்து விழுந்தது.
விபத்து குறித்து அறிந்த மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்க்க தொடங்கினார்கள் மசூதி இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்துள்ளார்கள்
மேலும் தொடர்ந்து மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த மசூதி 1830களில் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது
Tags: வெளிநாட்டு செய்திகள்
