சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து 'விக்ரம் லேண்டர்' வெற்றிகரமாக பிரிந்தது - இஸ்ரோ அறிவிப்பு
சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து 'விக்ரம் லேண்டர்' வெற்றிகரமாக பிரிந்தது - இஸ்ரோ அறிவிப்பு
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவு தளத்திலிருந்து, LVM3 M4 ராக்கெட் மூலம் சந்திரயான் – 3 விண்கலம் சரியாக 2:35 மணிக்கு விண்கலத்தை கடந்த ஜூலை, 14ம் தேதி இஸ்ரோ அனுப்பி வைத்தது.
பூமியிலிருந்து புறப்பட்ட 18 நிமிடங்களில் பூமியின் நீள் வட்ட பாதையில் சந்திராயன் செயற்கைக்கோளை நிலை நிறுத்தியது. பூமியில் இருந்து 179 கிமீ தொலைவில் சுற்று வட்டப்பாதையில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.
அதன்பின்பு இந்த விண்கலம் புவி வட்டப் பாதையில் இருந்து நிலவு வட்டப் பாதைக்குள் நுழைந்து நிலவை சுற்றி வந்தது.விண்கலத்துக்கும் நிலவுக்கும் இடையேயான சுற்றுப் பாதை தொலைவு படிப்படியாக குறைந்து வந்தது.
இந்நிலையில் இன்று சந்திரயான் - 3 விண்கலத்தில் உள்ள, 'புரபல்ஷன் மாட்யூல்' எனப்படும் உந்து கலத்தில் இருந்து, 'லேண்டர்' நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது
Tags: இந்திய செய்திகள் தொழில்நுட்பம்
