35 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, மதுரை, திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 35 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
அதன் படி Nilgiri, Coimbatore, Tiruppur, Erode, Salem, Namakkal, Karur, Dharmapuri, Krishnagiri, Tirupattur, Kallakurichi, Villupuram, Cuddalore, Ariyalur, Perambalur, Tiruchirapalli, Pudukottai, Thanjavur Tiruvarur, Nagapattinam, Mayiladuthurai, Tiruvallur, Chengalpattu, Chennai, Theni, Dindugal, Madurai, Virudunagar, Ramanathapuram, Sivaganga and Toothukudi districts of Tamilandu, Karaikal and Purucherry அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Tags: தமிழக செய்திகள்
