சந்திரயான் 3 ராக்கெட் லாரியில் பாலத்தை கடக்கும் காட்சி என பரவும் வீடியோ உண்மை என்ன chandrayaan truck
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் சந்திரயான் 3 பெங்களூரிலிருந்து, ஸ்ரீஹரிகோட்டா பாலத்தை கடக்கும்போது லாரிடிரைவர் எவ்வளவு மன அழுத்தத்தை எடுக்க வேண்டியிருந்தது என்பதைப் பாருங்கள், ஆகஸ்ட் 23 மாலை 5 மணிக்கு நிலவில் தரையிறங்கி உலகமே நம்மை பார்த்து வியந்ததற்கு இந்த ட்ரக் ட்ரைவரும் ஒரு காரணம் என்பதை இந்த காணொளியில் பாருங்கள் என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும்
ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை
கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, மேலும் அந்த வீடியோவை தனிதனி
புகைபடமாக மாற்றி கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில்
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ உண்மையானது அல்ல என்றும் அது ஓர் டிரக் சிமிலேட்டர் வீடியோ கேம் என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும்
குழு கண்டறிந்தது.
அந்த வீடியோவை பார்த்தாலே அது ஓர் கிராபிக்ஸ் என்று தெரிகின்றது ஆனாலும் அதனை உண்மை என பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள், அவர்களை என்ன என்று சொல்ல
நீங்கள் யூடியூப், அல்லது பேஸ்புக் வீடியோ சென்று டிரக் சிமிலேட்டர், truck simulator என சர்ச் செய்து பாருங்கள் அது போல் பல ஆயிரம் வீடியோக்கள் வரும்
முடிவு:-
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://www.facebook.com/MOHAMMEDPARVEZS/videos/720298689872428/
https://www.facebook.com/watch/100582175589064/610655854035182/
Tags: மறுப்பு செய்தி FACT CHECK
