செங்கல்பட்டு அருகே சாலையை கடக்க முயன்ற 3 இரு சக்கர வாகனங்கள் மீது டிப்பர் லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு.!
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது அதிவேகத்தில் வந்த டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே ஜிஎஸ்டி சாலையில் டிப்பர் லாரி ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி பொத்தேரி அருகே சாலையை கடக்க முயன்ற மூன்று இரு சக்கர வாகனங்களின் மீது அதிவேகமாக மோதியது.
இதில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த ஆறு பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பி ஓடிய ஓட்டுனரை தேடும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் விபத்தில் இறந்தவர்களில் எஸ்.ஆர்.எம். கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர் கார்த்திக் (23), முதலாமாண்டு மாணவர் ஜஸ்வந்த் (20) இருவரும் உயிரிழந்துள்ளனர் என்றும் மற்ற 4 பேர் உடல்கள் அடையாளம் காண்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்
