ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!
அதிகபட்ச தண்டனை விதித்ததற்கான காரணத்தை விசாரணை நீதிமன்ற நீதிபதி கூறவில்லை - உச்சநீதிமன்றம்
இரண்டு ஆண்டு தண்டனை என்பதற்கு பதிலாக ஒரு ஆண்டு பதினோரு மாதம் என தண்டனை வழங்கப்பட்டிருந்தால் ராகுல் காந்தி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்திருக்க மாட்டார் - உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து
எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என ராகுல் காந்தி 2019 ம் ஆண்டு கர்நாடகாவில் பேசியிருந்தார்.
அதனை எதிர்த்து குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் இந்திய தண்டனைச் சட்டம் 499 மற்றும் 500 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.
மேலும் ராகுல்காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் அளித்து அவருக்கு ஜாமீன் வழங்கியது
2 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியில் தொடர முடியாது எனும் விதியின் காரணமாக கேரளா, வயநாடு எம்பியாக இருந்த ராகுல்காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்
அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தை நாடிய ராகுல் மேல் முறையிட்டு மனு தள்ளுபடிச் செய்யப்பட்டது
இதன்பின்பு தனது தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி
ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
இந்நிலையில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
முன்னதாக ராகுல்காந்தி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரிகையில்,
நான் எந்த தவறும் செய்யவில்லை. அதனால் மன்னிப்பு கோர முடியாது என குறிப்பிட்டு இருந்தார்.
இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற விசாரணையில்,
அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டதன் காரணமாக தனி நபரின் உரிமை மட்டுமின்றி, அவருக்கு வாக்களித்த ஒட்டுமொத்த வயநாடு தொகுதி மக்களின் உரிமையும் பாதிக்கப்படுகிறது. அதிகபட்ச தண்டனை ராகுல்காந்திக்கு ஏன் வழங்கப்பட்டது என இது தொடர்பாக புகார் அளித்த மனுதாரர், குஜராத், சூரத் கீழமை நீதிமன்றம் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
