Breaking News

உ.பியில் 2 வயது மகளை தோளில் சுமந்து சென்ற தந்தை மீது துப்பாக்கி சூடு அதிர்ச்சி சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0
உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் ஒன்றரை வயது மகளை தோளில் தூக்கிக் கொண்டு நடந்து சென்ற நபரை அடையாளம் தெரியாத மர்மநபர்கள் தலையில் சுட்டுக் கொன்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 


உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் உள்ள பாபுசாய் பகுதியில் நேற்று இரவு 30 வயதான ஷோயப் என்ற நபர் தனது 2 வயது மகளுளை தோளில் வைத்து நடந்து செல்கின்றார். அப்போது அந்த சாலையில் எதிரே வந்த ஒருவர் திடீரென துப்பாக்கியை வெளியே எடுத்து, ஷோயப்பை துப்பாக்கியால் தலையில் சுட்டுவிட்டு, அங்கு காத்திருந்த இருவருடன் பைக்கில் ஏறி தப்பி ஓடிவிட்டனர்.

இந்த கொடூர தாக்குதலின் முழு காட்சியும் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது

துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயமடைந்த ஷோயப்பை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். தற்போது மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகின்றார்

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குஃப்ரான் மற்றும் நதீம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தாரிக் என்பவரை தேடி வருகின்றார்கள்

காரணம் என்ன:-

சோயப் திருமணம் செய்துகொண்ட சாந்தினி என்ற பெண்ணுடன் தாரிக்கின் சகோதரருக்கு முதலில் நிச்சயதார்த்தம் நடந்ததுள்ளது. பின்னர் அந்த பெண் தாரிக்கின் சகோதரரை விட்டுவிட்டு சோயப்பை திருமணம் செய்து கொண்டார். இதனால் தாரிக்கின் சகோதரரது நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்டது. முறிந்து போன நிச்சயதார்த்தத்தால் அவமானமாக உணர்ந்த தாரிக்கின் சகோதரர் பழிவாங்கவே இந்த துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்

வீடியோ பார்க்க:-

https://twitter.com/sanjay_desai_26/status/1691286672837931008

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback