Breaking News

ஓணம் பண்டிகையை முன்னிட்டு 29 ஆம் தேதி இந்த மாவட்டங்களில் விடுமுறை - எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா? onam festival holiday in tamilnadu

அட்மின் மீடியா
0

கேரளம் மாநிலத்தின் மலையாள மொழி பேசும் மக்களின் முக்கிய பண்டிகையாக ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. மகாபலி சக்கரவர்த்தியின் அகங்காரத்தை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து, அவரை அழிக்க முயன்றபோது மகாபலி சக்கரவர்த்தி திருமாலிடம் ஒவ்வொரு ஆண்டும் தனது மக்களை காண ஒரு வரம் கேட்டதாகவும் அதனை ஏற்று திருமாள் அருள் புரிந்ததாகவும் அந்த மக்களின் நம்பிக்கை.





அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திர நாளில் மகாபலி சக்கரவர்த்தி மக்களை காண வருவதாகவும் அவரை வரவேற்கும் வகையில் அத்தப்பூ கோலமிட்டு மக்கள் வரவேற்று வருகின்றனர். இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வரும் 29 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாட்டிலும் மலையாள சகோதர, சகோதரிகள் இந்த பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

அதற்காக கேரள மக்கள் அதிகம் உள்ள தமிழக மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, ஈரோடு, கோவை, நீலகிரி திருப்பூர் குமரி ஆகிய 9 மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மாவட்டம்:-

ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி சென்னை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:-

ஓணம் பண்டிகையை முன்னிட்டு 29.08.2023, செவ்வாய்க்கிழமை சென்னை மாவட்டத்துக்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேற்படி உள்ளூர் விடுமுறைக்குப் பதில் 02.09.2023 சனிக்கிழமை அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.ஆயினும், உள்ளூர் விடுமுறை நாளான 29.08.2023, அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள கரூவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு பொது மக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு செயல்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம்:-

ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி கோவை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் திரு.கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:-

2023-ம் ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 29.08.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இதற்கு பதிலாக அவ்வலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு எதிர்வரும் 02.09.2023 (சனிக்கிழமை) அன்று முழு பணிநாளாக செயல்படும். இந்த உள்ளூர் விடுமுறை நாள்,செலவாணி முறிச் சட்டம் 1881 (Negotiable Instruments Act 1881) -இன் கீழ் வராது என்பதால், உள்ளூர் விடுமுறை அறிவிக்கும் போது மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம்:-

ஓணம் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்

விடுமுறையை ஈடு செய்ய செப்டம்பர் 16 பணிநாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஓணம் பண்டிகைக்கு சென்னை மற்றும் கோவை ,நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே தற்போது வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள ஏழு மாவட்டங்களிலும் இதுவரை விடுமுறை அறிவிக்கப்படாததால் அங்குள்ள கேரள மக்கள் ஏமாற்றத்துடன் உள்ளனர். 

விரைவில் கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் ஆகஸ்ட் 29ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம்:-

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஓணம் பண்டிகை தினத்தினை முன்னிட்டு 29.08.2023 (செவ்வாய் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

29.08.2023 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக செப்டம்பர் திங்கள் நான்காவது சனிக்கிழமை (23.09.2023) அன்று 2023 கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஓணம் பண்டிகை தினத்திற்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881) -இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 29.08.2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு. தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம்:-

திருப்பூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி திருப்பூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி திருப்பூர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 29 ஆம் தேதி மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. அன்றைய நாள் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த அளவு பணியாளர்களுடன் அரசு கருவூலங்கள் செயல்படும் என்றும் இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் செப்டம்பர் 2ம் தேதி முழு நேர பணி நாளாக செயல்படும் என்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.' 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback