Breaking News

தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்வு! முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழகத்தின் 20 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் சுங்க கட்டண உயர்வு

தமிழக முழுவதும் உள்ள 54 சுங்க சாவடிகளில் கட்டண உயர்வு இரண்டு பிரிவாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் சில சுங்க சாவடிகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டது .மேலும் மீதமுள்ள சுங்க சாவடிகளுக்கு செப்டம்பர் மாதம் கட்டணம் உயர்த்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள 20 சுங்க சாவடிகளில் செப்டம்பர் ஒன்றாம் தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படுகிறது .

கார் ,வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை சென்றுவர 85 ரூபாயிலிருந்து கட்டணம் ஆனது 90 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இருமுறை சென்றுவர 125 ரூபாயிலிருந்து 135 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இலகுரக வாகனங்கள் ஒருமுறை சென்றுவர 145 ரூபாயிலிருந்து 160 ரூபாயாகவும் , 2 முறை சென்றுவர 220 ரூபாயிலிருந்து 240 ரூபாயாகவும் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. 

லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு 290 இல் இருந்து 320 ரூபாயாகவும் , இருமுறை சென்றுவர 440ல் இருந்து 480 ரூபாயாகவும், மாதாந்திர கட்டணம் 2770 இல் இருந்து 9,595 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback