காலாண்டு தேர்வு அட்டவணை 2023 வெளியீடு முழு விவரம்!
1 முதல் 12 ம் வகுப்பு வரை காலாண்டு தேர்வு அட்டவணை 2023 வெளியீடு முழு விவரம்!
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான காலாண்டுத் தேர்வுக்கால அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது.
11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்,15 முதல் 27-ம் தேதி வரை நடத்தப்படும்.
பிளஸ் 1 வகுப்புக்கு காலை 9.30 முதல் மதியம் 12.45 மணி வரையும்,
பிளஸ் 2 வகுப்புக்கு மதியம் 1.15 முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வு நடைபெறும்
6 முதல் 10-ம் வகுப்புகளுக்கு செப்.19-ல் தொடங்கி 27-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இதில் 6, 7, 8-ம் வகுப்புகளுக்கு காலை 10 முதல் மதியம் 2.30 மணி வரையும்,
9, 10-ம் வகுப்புகளுக்கு மதியம் 2 முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வு நடைபெறும்.
6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான உடற்கல்வி தேர்வு செப்.22-ம் தேதி நடத்தப்பட உள்ளது.
செப்.28 முதல் அக்.2-ம் தேதி வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்படும்.
6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புகளுக்கு
19ம் தேதி மொழிப்பாடம்,
20ம் தேதி விருப்ப மொழிப்பாடம்,
21ம் தேதி ஆங்கிலம்,
22ம் தேதி உடற்கல்வி,
25ம் தேதி கணக்கு,
26ம் தேதி அறிவியல்,
27ம் தேதி சமூக அறிவியல்
பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும்
பத்தாம் வகுப்புக்கான தேர்வுகள்
19ம் தேதி மொழிப்பாடம்,
20ம் தேதி ஆங்கிலம்,
22ம் தேதி கணக்கு,
25ம் தேதி அறிவியல்,
26ம் தேதி விருப்ப மொழிப்பாடம்,
27ம் தேதி சமூக அறிவியல்
பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும்
11ம் வகுப்புக்கான தேர்வுகள்:-
15ம் தேதி மொழித்தேர்வு தமிழ் மொழி தேர்வு நடைபெறும்.
19ம் தேதி ஆங்கில தேர்வு நடைபெறும்.
20ம் தேதி இயற்பியல், பொருளாதாரம் தேர்வு நடைபெறும்.
21-ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதவியல் தேர்வு நடைபெறும்.
22ம் தேதி வேதியல், புவியியல், அக்கவுண்டசி(கணக்குப்பதிவியல்) தேர்வு நடைபெறும்.
25ம் தேதி பையோ கெமிஷ்டிரி, கம்யூட்டர் சயின்ஸ், எத்திக்ஸ் அண்ட் இந்தியன் கல்சர் தேர்வு நடைபெறும்.
27-ம் தேதி கணிதம், விலங்கியல், காமெர்ஸ், மைக்ரோ பையாலஜி தேர்வு நடைபெறும்.
11ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.45 மணிக்கு தேர்வு தொடங்கி மதியம் 12.45 மணி வரை தேர்வு நடைபெறும்.
எனினும் கேள்வித்தாளை வாசிப்பதற்கு 10 நிமிடம், சரிபார்ப்பதற்கு 5 நிமிடம் என 15 நிமிடம் முன்னதாகவே தேர்வு அறைக்கு செல்ல வேண்டும்
12ம் வகுப்புக்கான தேர்வுகள்:-
15ம் தேதி மொழித்தேர்வு நடைபெறும்.
19ம் தேதி ஆங்கில தேர்வு நடைபெறும்.
20ம் தேதி பையோ கெமிஷ்டிரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், பொலிடிக்கல் சயின்ஸ், எத்திக்ஸ் அண்ட் இந்தியன் கல்சர் தேர்வு நடைபெறும்.
21ம் தேதி இயற்பியல், பொருளாதாரம் தேர்வு நடைபெறும்.
22-ம் தேதி கணிதம், விலங்கியல், காமெர்ஸ், மைக்ரோ பையாலஜி தேர்வு நடைபெறும்
.25-ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதவியல் தேர்வு நடைபெறும்.
27ம் தேதி வேதியல், புவியியல், அக்கவுண்டசி(கணக்குப்பதிவியல்) தேர்வு நடைபெறும்.
மதியம் 1.30 மணிக்கு தேர்வு தொடங்கி மாலை 4.30 மணி வரை தேர்வு நடைபெறும். எனினும் கேள்வித்தாளை வாசிப்பதற்கு 10 நிமிடம், சரிபார்ப்பதற்கு 5 நிமிடம் என 15 நிமிடம் முன்னதாகவே அதாவது மதியம் 1.15 மணிக்கே தேர்வு அறைக்கு செல்ல வேண்டும்.
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்
