Breaking News

பொது இடங்களில் மாடுகள் திரிந்தால் 2000 ரூபாய் அபராதம்! சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

அட்மின் மீடியா
0
உரிமையாளர்கள் மாடுகளை கட்டி வைக்காமல் சாலையோரங்களில் அலையவிட்டால் ரூ.2000 வரையிலும் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

 


நேற்று சென்னை சாலையில் சுற்றி திரிந்த மாடு சிறுமியை பலமாக முட்டியதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மாட்டின் உரிமையாளர் மீது கவனக்குறைவாக செயல்பட்டு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், விபத்து ஏற்படுவதனை தடுப்பதற்காக சென்னையில் உரிமையாளர் இல்லாமல் தனித்து விடப்பட்ட மாடுகளை பிடித்து அடைக்கும் பணி நடைபெற்று வருவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

 மேலும், மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளை கட்டி வைக்காமல் பொது இடங்களில் அலையவிட்டால் உரிமையாளருக்கு ரூபாய் 2000 வரையிலும் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது .

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback