Breaking News

20 % தள்ளுபடி விலையில் பேடிஎம் மூலம் சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட் எடுப்பது எப்படி முழு விவரம் metro rail ticket paytm

அட்மின் மீடியா
0

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்காக டிக்கெட்களை நேரில் கவுண்டரில் பெரும் வசதி மட்டும் இல்லாமல் வாட்ஸ் - அப், க்யூ ஆர் கோடு, மூலம் டிக்கெட் எடுக்கும் முறைகளும் உள்ளது இந்நிலையில் தற்போது Paytm செயலி மூலம் மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 



சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்களை இனி  Paytm ஆப் மூலம் பெற்றுக் கொள்ளும்  வசதியை இன்று மெட்ரோ நிர்வாக இயக்குனர் தொடங்கி வைத்துள்ளார்.

பெங்களூர், கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத், டெல்லி ஆகிய நகரங்களில் இந்த முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. தற்போது இந்த புதிய முறை சென்னை மெட்ரோ பயணிகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பேடிஎம் ஆப்பில் அதிகபட்சமாக 6 டிக்கெட் வரை பெற்றுக் கொள்ளலாம். பேடிஎம் மூலம் டிக்கட்டை எடுக்கும் போது 20% கட்டண தள்ளுபடியும் உங்களுக்கு கிடைக்கும்.

Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback