பெண்களுக்கு ஹார்ட் எமோஜி அனுப்பினால் 2 ஆண்டு சிறை சவூதி குவைத்தில் புதிய சட்டம் முழு விபரம் heart emoji ban
சமூக வலைதளங்களில் அறிமுகமில்லாத பெண்களுக்கு ஹார்ட் எமோஜி அனுப்பினால் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை சவுதி மற்றும் குவைத் அரசுகள் இயற்றியுள்ளன.
குவைத் மற்றும் சவுதி அரேபியா நாட்டு சைபர் சட்டத்தின்படி, பெண்கள் அல்லது சிறுமிகளுக்கு ஹார்ட் எமோஜி அனுப்புவது குற்றமாகக் கருதப்படும் எனவும், இந்த சட்டத்தை மீறுவோருக்கு அதிகபட்சமாக சிறைதண்டனையும் அபராதமும் வழங்கப்படும் என இருநாட்டு அரசும் அறிவித்திருக்கின்றன.
அதன்படி, குவைத்தில் பெண்களுக்கோ, சிறுமிகளுக்கோ வாட்ஸ் ஆப் அல்லது ஏதேனும் சமூக வலைதளங்கள் மூலமாகவோ, ’ஹார்ட் எமோஜி’ அனுப்புவோருக்கு, இரண்டு ஆண்டுகள் வரை சிறைதண்டனையும் அதோடு, 2000 குவைத் தினார்( ரூ. 5,35,584 ) அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், சவுதி அரேபியா நாட்டிலும் இதேபோன்ற சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, பெண்களுக்கோ, சிறுமிகளுக்கோ வாட்ஸ் ஆப் அல்லது ஏதேனும் சமூக வலைதளங்கள் மூலமாகவோ, ’ஹார்ட் எமோஜி’ அனுப்புவோருக்கு, இரண்டு அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுமெனவும், மேலும், இந்த குற்றச் செயலுக்கு அபராதமாக 100,000 சவுதி ரியால்கள் வரை ( ரூ. 21,92,588 ) விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
News Source:-
Tags: வெளிநாட்டு செய்திகள்
