Breaking News

நிலவில் தரை இறங்கிய பிரஜ்ஞான் ரோவர் அடுத்த 14 நாட்கள் என்ன செய்யும் முழு விவரம்

அட்மின் மீடியா
0

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரை இறங்கியது என இஸ்ரோ அறிவிப்பு!!



நிலவின் தென் துருவம் அருகே சென்ற முதல் நாடு இந்தியா என வரலாற்று சாதனை செய்துள்ளது இந்தியா

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவு தளத்திலிருந்து, LVM3 M4 ராக்கெட் மூலம் சந்திரயான் – 3 விண்கலம் சரியாக 2:35 மணிக்கு விண்கலத்தை கடந்த ஜூலை, 14ம் தேதி இஸ்ரோ அனுப்பி வைத்தது மேலும் சந்திரயான் ஆக.23-ல் நிலவில் தரையிறங்கும் என அறிவிக்கப்பட்டதுஅதன் படி இன்று நிலவின் தென் துருவத்தில்  தரையிரங்கியது சந்திரயானின் விக்ரம் லேண்டர் 

அதன் பின்னர் நிலவின் தென் பகுதியில் 14 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளும் வகையில் சந்திரயான்-3 விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘சந்திரயான் 3’ விண்கலம் நிலவில் தரையிறங்கி உள்ள நிலையில், பல அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் என பலரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

அடுத்த நிகழ்வு என்ன:-

லேண்டர் தரை இறங்கியதும் 2 மணி நேரத்திற்கு மணலால் ஏற்படும் புழுதியால் அப்பகுதி முழுவதும் மங்கலாக இருக்கும். 

அதன் பின்பு விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்து நிலவில் கால் பதித்தது. பிரக்யான் ரோவர் சக்கரங்களில் இஸ்ரோவின் லோகோ மற்றும் நமது தேசிய சின்னம் பதிக்கப்பட்டுள்ளது.விக்ரம் லேண்டரில் இருந்து நிலவில் இறங்கிய பிரக்யான் ரோவர் இஸ்ரோவின் லோகோ மற்றும் இந்திய தேசிய சின்னத்தையும் நிலவில் பதித்துச் சென்றது. நிலவில் காற்று இல்லை. எனவே இந்த அடையாளம் எப்போதும் இருக்கும். நிலவில் பிரக்யான் ரோவர் செல்லும் இடங்களில் எல்லாம் நமது தேசிய சின்னத்தை பதித்துச் செல்லும்.

லேண்டர் தரையிறங்கிய நான்கு மணி நேரத்திற்கு பிறகு,  நிலவின் தென் பகுதியில் 14 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளும் வகையில் சந்திரயான்-3 விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது

சந்திரனின் ஒரு நாள் என்பது பூமியில் 28 நாட்களுக்குச் சமம். அதாவது அங்கு 14 நாட்களுக்குப் பகல் மற்றும் 14 நாட்களுக்கு இரவு நிலவும்.இதில் 14 நாட்களுக்கு பகல் நீடிக்கும் காலகட்டத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியுள்ளது. இந்த இரண்டு வார காலகட்டத்தில் இஸ்ரோவின் ஆய்வுகளை அது நிலவில் மேற்கொள்ளும்.

26 கிலோ எடை கொண்ட ரோவர் நிலவில் தரையிறங்கிய பின்பு தனது ஆய்வுகளை மேற்கொள்ளும். ரோவரில் இணைக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு சென்சார், ஆண்டனாக்கள் மூலம் தகவல்கள் பெறப்படும். 

'பிரஜ்ஞான்' ரோவர், ரோபோ போன்றது. ஆறு சக்கரம், சோலார் பேனல், கேமரா இருக்கும். 500 மீட்டர் சுற்றளவுக்கு நிலவின் தரையில் ஊர்ந்து சென்று ஆய்வில் ஈடுபடும். 

நிலவின் தரைப்பரப்பு, என்னென்ன தனிமங்கள், நீர் பனிக்கட்டி உள்ளதா, நிலவின் வளிமண்டலம் பற்றி ஆய்வு செய்து பூமிக்கு அனுப்பும்.ரோவர் நிலவின் மண்ணைக் குடைந்து அதிலிருந்து மாதிரிகளை எடுத்து, அதை தன்னிடம் உள்ள லேசர் கற்றைகள் வாயிலாக உடைத்து, என்ன தனிமங்கள் உள்ளன என்பது பற்றி ஆய்வு செய்யும்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback