12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் முழு விவரம்
12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் முழு விவரம்
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்
தொழில்துறை ஆணையராக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி ராஜாராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளி நலத்துறை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி சிகி தாமஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
குமார் ஜெயந்த் தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை ஊரக மேம்பாட்டு முகமை திட்ட அதிகாரியாக மோனிகா ரானா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை குடிநீர் வழங்கம் மற்றும் கழிவுநீர் அகற்றம் வாரிய செயல் இயக்குநராக சரவணம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி பூஜா குல்கர்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வருவாய்
நிர்வாகத்துறை கூடுதல் ஆணையராக பிரகாஷ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ள
நிலையில், டி.ஆர்.பி. தலைவராக ஸ்ரீ வெங்கட பிரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி ஆனந்தகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக சிறுதொழில் மேம்பாட்டு கழகத்தின் தலைவராக விகரம் கபூர் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சுகாதாரம் மற்றும் குடுப நலத்துறை சிறப்பு செயலாளராக கலையரசி நியமிக்கப்பட்டுள்ளார். மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய தலைவர் பொறுப்பை கூடுதலாக கலையரசி கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்