11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு மத்திய அரசின் புதிய திட்டம்
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது
மேலும் எழுதிய 2 தேர்வில் எதில் அதிக மதிப்பெண் கிடைக்கின்றதோ அதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.
11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்தும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கிறது ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம்!
மேலும், 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு மொழிகள் படிக்க வேண்டும் என்றும் அதில் ஒன்று இந்தி மொழியாக இருக்க வேண்டும் எனவும் மத்திய அரசின் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில் 2024 கல்வி ஆண்டுக்கான புத்தகங்கள் தயாரிக்கப்பட உள்ளது
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்
