Swiggy, Zomato ,Amazon இ-காமர்ஸ் டெலிவரி செய்யும் தொழிலாளர்களுக்கு ரூ.4 லட்சம் இலவச காப்பீடு..! கர்நாடக முதல்வர் அதிரடி அறிவிப்பு..! 4 lakh insurance for Zomato, Swiggy employees
இ-காமர்ஸ் நிறுவனங்களில் டெலிவரி பணியாளர்களாக வேலை செய்பவர்களுக்கு ரூ.4 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டசபை கூட்டத்தொடரில் விதான் சவுதாவில் வெள்ளிக்கிழமை மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை முதல்வரும், நிதியமைச்சருமான சித்தராமையா தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் அமேசான், ஜொமேட்டோ மற்றும் ஸ்விக்கி போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களில் டெலிவரி பணியாளர்களாக பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.4 லட்சம் காப்பீடு இலவசமாக வழங்கப்படும் எனவும்.
இந்தத் தொகையில் ஆயுள் காப்பீடாக ரூ.2 லட்சமும், விபத்துக் காப்பீடாக ரூ.2 லட்சமும் அடங்கும். இன்சூரன்ஸ் பிரீமியத் தொகை முழுவதையும் மாநில அரசே ஏற்கும் என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்களின் வேலையின் முறைசாரா மற்றும் நிச்சயமற்ற தன்மை குறித்த அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்யும் பொறுட்டு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
