Breaking News

உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்கலாம் முழு விவரம்...subsidy for ulemas to buy two wheelers

அட்மின் மீடியா
0

திருப்பூர் மாவட்டத்தில் வக்ஃபு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படவுள்ளது.




மாவட்டஆட்சித்தலைவர் திரு.தா.கிறிஸ்துராஜ், இ.அ.ப.,அவர்கள் தகவல்

தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு, திருப்பூர் மாவட்டத்தில் வக்ஃபு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் தங்கள் பணியினை சிறப்பாகவும், செம்மையாகவும் செயல்படுத்துவதற்கு ஏதுவாக புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபருக்கு, இருசக்கர வாகனத்தின் மொத்த விலையில் ரூ.25,000/- அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம், இதில் எதுகுறைவோ அத்தொகையை மானியமாக வழங்கப்படும். எனவே, இத்திட்டத்தின் கீழ் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்:-

தமிழ்நாட்டில் வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு திருப்பூர் மாவட்டத்திலுள்ள வக்ஃபு நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்கள் விண்ணப்பிக்கும் நாளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றிருக்க வேண்டும்,தமிழ்நாட்டை சார்ந்தரவாக இருத்தல் வேண்டும். 18 வயதிலிருந்து 45 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்கும் போது இரு சக்கரவாகனம் ஓட்டும் கற்றுணர்வுக்கான (LLR) சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். மேலும், திருப்பூர் மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட 63 வக்ஃபு நிறுவனத்தில் ஒரே பள்ளிவாசலில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் மானிய உதவி கோரி விண்ணப்பித்தால் 1. பேஷ் இமாம் 2. அராபி ஆசிரியர்கள் 3. மோதினார் 4. முஜாவர் என்ற முன்னுரிமையின் அடிப்படையில் மானியத் தொகை வழங்கப்படும்.

இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:-

ஆதார் அட்டை, வாக்காளர் அடையாளஅட்டை, குடும்பஅட்டை, வருமானசான்று, வயதுசான்றிதழ், புகைப்படம், சாதிசான்று, புகைப்படம் மாற்று திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரிடம் பெறப்பட்ட சான்று, ஓட்டுநர் உரிமம்/LLR கல்வி சான்றிதழ், வங்கிகணக்கு எண் மற்றும் IFFC குறியீடுடன் கூடிய வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் நகல், சம்மந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்ஃபில் பணிபுரிகிறார் என்பதற்கான சான்று பெற்ற மாவட்ட வக்ஃபு கண்காணிப்பாளர் மேலொப்பத்துடன் சமர்பிக்க வேண்டும் மற்றும் வாகனம் வாங்குவதற்கான விலைப்பட்டியல்/ விலைப்புள்ளி ஆகியவை இணைக்கப்படவேண்டும்.

மேலும், மானியவிலையில் இரு சக்கரவாகனம் வாங்கத் தேவையான விவரங்கள் மற்றும் படிவத்தினை திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலகத்தில் நேரில் பெற்று, அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலர் மாவட்ட ஆட்சியரகம் திருப்பூர் (அறைஎண்:116) என்ற முகவரிக்குதபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்கலாம். மேலும் கூடுதல் விரவங்களுக்கு 0421 - 2999130 என்ற தொலைபேசியிலும் அல்லது dbcwotpr@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொண்டு இத்திட்டத்தில் விண்ணப்பித்து விண்ணப்பித்து பயனடையுமாறு, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தா.கிறிஸ்துராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback