Breaking News

புதுச்சேரி ஹோட்டல் அறையில் ரகசிய கேமரா! போலீசார் வழக்கு பதிவு | உஷார் பெண்களே உஷார் puducherry hotel hidden camera

அட்மின் மீடியா
0

புதுச்சேரி மேரி உழவர்கரையைச் சேர்ந்தவர் பிரியன்(22). கல்லூரி மாணவரான இவர், நேற்று தனது தோழியுடன் 100 அடி ரோட்டில் தனியார் தங்கும் விடுதியில் அங்கு தங்கியிருந்த தங்களது உறவினர்களை சந்திக்க சென்றனர்.



அப்போது அந்த அறையில் தொலைபேசி வயர் இணைப்பு பாக்ஸ் பொருத்தப்பட்டிருந்த நிலையில் சந்தேகம் எழுந்தது. அதை ஆய்வு செய்த போது அதில்  மிகச் சிறிய அளவிலான நவீன தொழில்நுட்ப வசதியுடன்கூடிய ரகசிய கேமிரா பொருத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது

இதுகுறித்து விடுதி ஊழியா்களிடம் கேட்டபோது மறுத்துப் பேசிய அவா்கள், அந்த கேமரா மூலம் பதிவான காட்சிகளை அழிக்க முயன்றனராம்.

உடனடியாக இதுகுறித்து புதுச்சேரி கிழக்கு பிரிவு காவல் கண்காணிப்பாளா் சுவாதி சிங்கிடம் பப்ரியன் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், சம்மந்தபட்ட விடுதிக்கு வந்த போலிசார் அங்கு விசாரனை செய்தார்கள் ஊழியா்கள் 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இதேபோல் அந்த விடுதியிலுள்ள மற்ற அறைகளிலும் ரகசிய கேமிரா பொருத்தப்பட்டுள்ளதா? என்பது தொடர்பான ஆய்வில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: புதுச்சேரி செய்திகள்

Give Us Your Feedback