கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி காலமானார். Oommen Chandy Death News
கேரளத்தின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி காலமானார். அவருக்கு வயது 79. பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சற்று முன் காலமானார்.
கேரளா மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி இன்று அதிகாலை பெங்களூருவில் உயிரிழந்தார்.
உம்மன் சாண்டி அவர்கள் கடந்த 2004 மற்றும் 2011 ஆகிய காலகட்டத்தில் கேரளா மாநில முதல்வராக பொறுப்பில் இருந்துள்ளார்.
மேலும் இவர் 1977, 1980, 1982, 1996, 2001, 2006, 2011, 2016, 2021ம் ஆண்டு என 9 முறை சட்ட மன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள தனது மகன் கண்காணிப்பில் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4 மணிக்கு உம்மன் சாண்டி காலமானார்
Tags: இந்திய செய்திகள்
