உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை minister ponmudi houses are raided
உயர்கல்வித் துறை அமைச்சரும், திமுக துணை பொதுச் செயலாளருமான பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
திமுக துணை பொதுச் செயலாளர் பொன்முடி தமிழ்நாட்டின் முக்கிய துறைகளின் அமைச்சராக பதவி வகித்துள்ளார் மேலும் கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சியை பிடித்த பிறகு, தற்போது அவர் உயர்கல்வி அமைச்சர் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் சென்னை சைதாபேட்டை ஸ்ரீநகர் காலணியிலுள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கதுறை சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல விழுப்புரம் வீட்டிலும் பொன்முடிக்குச் சொந்தமான பிற இடங்களிலும் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்திய நிலையில், அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபடுவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
