Breaking News

மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் மன்னிக்கவே மாட்டோம்.! பிரதமர் மோடி கடும் கண்டனம்.! manipur

அட்மின் மீடியா
0

இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்க்கு, ராகுல் காந்தி, பிரியங்கா, அரவிந்த் கெஜ்ரிவால் , ஸ்டாலின் , உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



இந்நிலையில் இன்று முதல் ஆகஸ்ட் 11 வரையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் மழைக்கால கூட்டத்தொடர் துவங்க உள்ளது இன்று மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் நாடளுமன்ற வந்துள்ள பிரதமர் மோடி செய்தியாளர்கள் சந்திப்பில்

மணிப்பூர் சம்பவம் பெரும் வேதனையையே கொடுத்துள்ளது. எனது இதயம் கனத்துள்ளது. மணிப்பூர் பெண்களுக்கு நடந்த கொடூரத்தை என்றும் மன்னிக்க மாட்டோம். இந்தியாவின் தாய் மற்றும் சகோதரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என பிரதமர் மோடி செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டு பேசினார்.

அதேபோல் மணிப்பூரில் பெண்களுக்கு நிகழ்ந்த அநீதிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

மணிப்பூர் மாநில அரசும், மத்திய அரசும் பெண்களுக்கு எதிராக நடந்த இந்த சம்பவத்திற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும், தவறினால் உச்சநீதிமன்றம் நேரடியாக தலையிடும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார். மேலும் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஜூலை 28 ம் தேக்குள் உச்சநீதிமன்றத்தில், அறிக்கை தாக்கல் செய்யவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மணிப்பூரில் பெண்களுக்கு கொடூரம் இழைக்கப்பட்ட வழக்கில் முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹேரதாஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

அதேபோல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். 

அதில், மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரமான வன்முறையால் முற்றிலும் மனம் உடைந்து திகைப்படைந்ததுள்ளேன். நமது மனசாட்சி எங்கே? வெறுப்பும் விஷம் மனித குலத்தின் ஆன்மாவையே வேரோடு பிடுங்குகிறது. இத்தகைய அட்டூழியங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நின்று, பச்சாதாபமும் மரியாதையும் கொண்ட சமுதாயத்தை வளர்ப்பதற்கு உழைக்க வேண்டும். 

மணிப்பூரில் அமைதி திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும். என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback